Duration 4700

மின்சாரம் தாக்கி காவலர் பரிதாப மரணம்

21 watched
0
0
Published 19 Jan 2022

மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி காவலர் பலி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையில் பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஜீவிதன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு இவரது வீட்டில் வயரிங் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது உயிரிழந்தார். இதுதொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Category

Show more

Comments - 0